அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நடத்தும் “ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் நினைவு 7’s ஃபுட்பால் டோர்னமென்ட் – 2026” (Haji M.S. Tajudeen Memorial 7’s Football Tournament) நாக்-அவுட் கால்பந்து போட்டி தொடங்குகிறது.
இப்போட்டிகள் நாளை மற்றும் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 29 & 30) அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி (ரஹ்) ஸ்போர்ட்ஸ் அகாடமி & நாலேஜ் வில்லேஜ் மைதானத்தில் நடைபெறுகின்றன. 19 வயதுக்குட்பட்ட (Under-19) வீரர்களுக்கான இத்தொடரில் பல அணிகள் மோதி தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர்.
பரிசு விவரங்கள்:
வெற்றி பெறும் அணிகளுக்கு சுழற்கோப்பையுடன் (Rolling Trophy) கூடிய ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
முதலிடம்: ₹15,000 & சுழற்கோப்பை
இரண்டாமிடம்: ₹10,000
மூன்றாமிடம்: ₹7,000
நான்காமிடம்: ₹4,000
மேலும் சிறந்த ஆட்டக்காரர் (Best Player), சிறந்த கோல்கீப்பர் (Best Goal Keeper), மற்றும் அதிக கோல் அடித்த வீரர் (Best Scorer) ஆகியோருக்கு தலா ₹1,000 சிறப்புப் பரிசும் வழங்கப்பட உள்ளது.
இப்போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் கார்த்திகேயன், குழலி, கோகுல் மற்றும் நிர்வாக அலுவலர்கள் அஹ்மத் அன்வர், அஷ்ரப் அலி ஆகியோர் முன்னின்று செய்துள்ளனர். கால்பந்து ரசிகர்களும் ஊர் பொதுமக்களும் மைதானத்திற்கு வருகை தந்து வீரர்களை உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



