ரமலானை வரவேற்போம்: அதிரை மகாதிப் நடத்தும் ஆன்லைன் வழிகாட்டுதல் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது!

புனித ரமலான் மாதத்தின் வருகையை முன்னிட்டு, நமது ரமலான் கால அமல்களைத் திட்டமிட்டுச் சிறப்பாகச் செய்திட ஏதுவாக, அதிரை மகாதிப் சார்பாகச் சிறப்பு ஆன்லைன் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன் ஷா அல்லாஹ் இன்று 17, பிப்ரவரி செவ்வாய்க்கிழமை இரவு 8:30 மணியளவில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் மார்க்க அறிஞர்கள் இருவர் ரமலான் குறித்துச் சிறப்புரையாற்ற உள்ளனர்.

நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்:
தலைப்பு 1: ‘மாற்றத்திற்கான மாதம் ரமலான்’ – இதில் அஷ் ஷைய்க் மௌலவி அல்ஹாஃபிழ் ஆஷிக் அஹ்மது ஹஸனி அவர்கள் ரமலான் மாதத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றுகிறார்கள்.

தலைப்பு 2: ‘ரமலானும் ரப்பானிய்யுன்களும்’ – இதில் அஷ் ஷைய்க் மௌலவி அல்ஹாஃபிழ் முஹம்மது இப்ராஹீம் அவர்கள் ரமலான் காலத்தில் ஒரு முஃமின் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள், அதில் செய்ய வேண்டிய அமல்கள் மற்றும் நம் முன்னோர்கள் எவ்வாறு ரமலானை கழித்தார்கள் என்பது குறித்துத் தெளிவுபடுத்துகிறார்கள்.

இந்த நிகழ்ச்சி கூகுள் மீட் (Google Meet) தளம் வாயிலாக இணையவழியில் நடைபெறுகிறது.

மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இச்சிறப்பு நிகழ்வில் தங்களின் இல்லங்களில் இருந்தே கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இணைய இணைப்பு (Join Link): ⬇️

https://meet.google.com/apa-bvpq-hmr

Prayer Times

Advertisement