தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கான “Challenges of Social Media” எனும் 3 நாள் பயிற்சி பட்டறையின் நிறைவு விழா இன்று (03-09-2025) சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
இந்த அரங்கில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வந்த வதந்தி மற்றும் வெறுப்புப் பரப்புரைகளை சிறப்பாக முறியடித்ததற்காக அதிராம்பட்டினத்தை சேர்ந்த நூருல் இப்னு ஜஹஃபர் அலி அவர்களுக்கு தமிழ் நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புத்தகம் வழங்கி கவுரவித்துள்ளார்.
மேலும் தனது பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா பக்கத்தில் நூருலின் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.

