ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 1 முதல் 7 வரை அனுசரிக்கப்படும் தேசிய ஊட்டச்சத்து வாரம் இதன் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 1982 முதல் மத்திய அரசு சார்பில் தேசிய ஊட்டச்சத்து வாரம் கடை பிடிக்கப்படுகிறது. ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது போல நலமுடன் இருப்பதற்கு ஆரோக்கியமான, இயற்கையான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். உணவில் இறைச்சி, புரதம், காய் கனிகள், என அனைத்து வித சத்துகளும் சமச்சீரான அளவில் இடம் பெறவேண்டும்.
இந்த நவீன காலத்தில் நாம் உட்கொள்ளும் உணவு முறைகளில் ஏற்படும் தவறுகளில் முக்கியமானது, ஆரோக்கியமான உணவுகளைத் தவிர்த்து, அதிக சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட், மற்றும் பதப்படுத்தப்பட்ட துரித உணவுகளை உட்கொள்வதாகும். இதனால் உடல் பருமன், செரிமான பிரச்சனைகள், மற்றும் சோர்வு போன்ற பல உடல் உபாதைகள் ஏற்படுகிறது ஆனால் பாரம்பரிய இயற்கை உணவை நாம் உட்கொண்டால் கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புகள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் போன்ற பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.
இயற்கை உணவு வகைகள் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் கழிவுகளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த உணவுகளில், இலை கீரைகள் வைட்டமின்கள் A, C, K மற்றும் B வைட்டமின்கள், கால்சியம், இரும்பு போன்ற தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன. பருப்பு வகைகள் புரதச்சத்து நிறைந்தவை. மீன், கடல் சிப்பிகள், மற்றும் நண்டுகள் போன்ற கடல் உணவுகள் ஊட்டச்சத்துக்களின் சிறந்த ஆதாரங்களாகும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு நோயற்ற வாழ்வை வாழ நாம் அனைவரும் முன்வர வேண்டும்.
உடல் நலம் மட்டுமின்றி, உள மற்றும் சமூக நன்னிலையையும் பேண ஆரோக்கியமான உணவு உதவுகிறது…
அ.அக்லன் கலீஃபா
நகர மருத்துவ அணி செயலாளர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
அதிராம்பட்டினம்
01-09-2025



