அதிராம்பட்டினம் AFCC நடத்திய இரண்டாம் ஆண்டு U19 கிரிகெட் தொடர் போட்டி கடந்த 15, 16 ஆகிய இரண்டு நாட்கள் அதிரை AFWA மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. இத்தொடர் 16 அணிகளுக்கு இடையே நடைபெற்றது,
அதிரை AFCC ஜூனியர் அணியினரும் மல்லிபட்டினம் MFCC ஜூனியர் அணியினரும் இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது, 16-05-2025 மாலை நடைபெற்ற இறுதிப்போட்டில் MFCC ஜூனியர் அணியினர் 8.0 ஓவர்களுக்கு 47 ரன்கள் அடித்து மூன்று விக்கட்டுகளை இழந்தனர்,
இந்நிலையில் 48 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் AFCC ஜூனியர் அணி களம் இறங்கினர், களம் இறங்கிய மறுகணமே மழை பெய்ய தொடங்கியதால் போட்டி அப்படியே நிறுத்தப்பட்டது,
இந்நிலையில் அப்போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸ் இன்று 21-05-2025 மாலை AFWA மைதானத்தில் நடைபெற்றது… 48 ரன்களை இலக்காக கொண்டு களம் இறங்கிய AFCC அணியினர் 7.2 ஓவர்களில் 48 ரன்கள் அடித்து இரண்டு விக்கெட்களை மட்டுமே விட்டுக்கொடுத்து அபார வெற்றிபெற்றது
முதல் பரிசு 5000₹ = AFCC அதிரை
இரண்டாம் பரிசு 3000₹ = மல்லிபட்டினம் MFCC
மூன்றாம் பரிசு 1000₹ = PCC அதிரை
மூன்றாம் பரிசு 1000₹ = பரவதுர்










