செக்கடி பள்ளியில் சிறப்பாக நடந்து முடிந்த ஜகாத் விழிப்புணர்வு கருத்தரங்கம்! (புகைப்படம்)

அதிராம்பட்டினம் செக்கடி பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு ஜமா அத்துவல் உலமா சபை சார்பாக ஜகாத் விழிப்புணர்வு மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி இன்று (18/02/2025) காலை முதல் நடைபெற்றது.

தமிழ்நாடு ஜமா அத்துவல் உலமா சபை தலைவர் பி.ஏ. காஜா முயீனுத்தீன் பாக்கவி ஹழ்ரத் தலமையில் நடைபெற்றது

தஞ்சாவூர் மாவட்ட வட்டார ஜமா அத்துவல் உலமா சபை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் தஞ்சாவூர் மாவட்ட ஜமா அத்துவல் உலமா சபை தலைவர் மவ்லவி அல்ஹாஜ் எம். ஹாஜா முஹையத்தீன் மிஸ்பாஹி ஹழ்ரத் வரவேற்று பேசினார்

முன்னதாக தமிழ்நாடு ஜமா அத்துவல் உலமா சபை பொருளாளர் மவ்லவி அல்ஹாபிழ் எஸ், முஜிபுர் ரஹ்மான் மஸ்லஹி ஹழ்ரத் துவக்க உரையாற்றினார்

ஜமா அத்துவல் உலமா சபை துணை பொதுச் செயலாளர் மவ்லவி அல்ஹாஜ் கே.எம். இல்யாஸ் ரியாஜி ஹழ்ரத், மேலப்பாளையம் ஃபைளுர் ரஹ்மான் பெண்கள் அரபிக்கல்லூரி தலைமை பேராசிரியர் மவ்லவி, அல் ஹாபிழ் ஏ, முஸ்தஃபா மஸ்லஹி ஹழ்ரத் ஆகியோர் கருத்துரை யாற்றினார்

தமிழ்நாடு ஜமா அத்துவல் உலமா சபை பொதுச் செயலாளர் மவ்லவி டாக்டர் வி,எஸ், அன்வர் பாதுஷா நெறியாளுகை யாற்றினார். கூட்டத்தில் அதிகமானோர் ஜகாத் பற்றிய கேள்வி பதில் நிகழ்ச்சியில் அதிகமான கேள்விகளை மாறி மாறி கேட்டனர் எதற்கும் சடைக்காமல் கினீர், கினீர் என்று பதில் அளித்தது கூடி இருந்தோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியது

நிகழ்சிகளை தமிழ்நாடு ஜமா அத் உலமா சபை பொதுச் செயலாளர் மவ்லவி டாக்டர் வி.எஸ். அன்வர் பாதுஷா உலவி ஹழ்ரத் அவர்கள் தொகுத்து வழங்கினர்

நிகழ்ச்சியில் அவ்வப்போது இஸ்லாமிய கீதம் படிய மௌலானா மௌலவி இப்ராஹிம் ஹஜ்ரத் கூடி இருந்த மக்களின் பாராட்டை பெற்றனர்

இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் அதிராம்பட்டினம் மற்றும் முத்துப்போட்டை, மல்லிபட்டினம், மதுக்கூர் போன்ற பகுதிகளில் இருந்து அதிகமானோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்

நிகழ்ச்சியின் நிறைவில் அதிராம்பட்டினம் ஜமா அத்துவல் உலமாசபை செயலாளர் மீரான் மவ்லவி மற்றும் முஹம்மது நெய்னா மவ்லவி ஆகியோர் நன்றி, துவாவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders