அதிராம்பட்டினம் எம்.கே.என். அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் ஸலாஹிய்யா மதர்சாவின் 126 வது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று 11/2/2025 செவ்வாய்க்கிழமை காலை காலை 9 மணிக்கு அல் மத்ரஸத்துஸ் ஸலாஹிய்யா முதல்வர் ஏ,எஸ், அஹ்மது இப்ராஹிம் காஷிஃபி ஹழ்ரத் தலைமையில் நடைபெற்றது.
அல் மத்ரஸத்துர் ஸலாஹியா பேராசிரியர்கள் மொளவி அஹ்மது ஸலாஹி ஹழ்ரத், ஹாஃபிழ் இம்ரான் ஹுசைன் இம்தாதி ஹழ்ரத்,சென்னை மஸ்ஜித் முபரக் ஆவடி பள்ளி தலைமை இமாம் முஹம்மது அப்துல் காதிர் ஆகியோர் சிறப்புரை யாற்றினார்கள்
இந்த ஆண்டு ஆலிம் பட்டம் மூன்று நபர்களும், ஹப்ஸ் காரி பட்டம் மூன்று மாணவர்களும், ஹாபிழ் பட்டம் ஆறு மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.
பின்பு மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேருரையாற்றிய மேலப்பாளையம் உஸ்மானிய்யா அரபிக்காலூரி பேராசிரியர் எஸ்,எஸ், ஹைதர் அலி மிஸ்பாஹி ஹழ்ரத் கூறியதாவது:-
பட்டம் பெற்ற மாணவர்களுக்கு இனிமேல்தான் பல சவால்கள் உள்ளது நாம் பட்டம் பெற்று பல உலமாக்களை உருவாக்க பாடுபட வேண்டும், நாம் படித்த மத்ரஸாவுடன் தொடர்பில் இருக்கவேண்டும் கியாமத் நாள்வரை இந்த மத்ரசா நிலைத்து நிற்க்க உதவ வேண்டும் என்றனர் நிகழ்ச்சி நிறைவில் மத்ரசா மேனேஜர் அஹ்மது கபீர் நன்றி கூறினார்



