அதிரையில் கடந்த (31/01/2025) அன்று அறிமுகமாகிய CROWD செயலி நேற்று முதல் தனது டெலிவரி சேவையை தொடங்கியது. முதற்கட்டமாக உணவு மற்றும் மளிகை பொருட்களை டெலிவரி செய்கிறது உள்ளூர் வியாபாரிகளிடமிருந்து பெறப்பட்டு பயனர்களுக்கு குறைந்த விலையில் டெலிவரி செய்கிறது.
இன்னும் சிக்கன், மட்டன் மற்றும் மீன் போன்ற பிற டெலிவரி சேவைகளை குறைந்த விலையில் விரைவில் தொடங்க உள்ளது. குறிப்பாக இந்த செயலி மூலம் உள்ளூர் வியாபாரிகளிடம் ஒப்பந்தம் மேற்கொண்டு குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க வழிவகுக்கும்.
தற்போது ஆன்ட்ராய்டு செயலி மட்டும் அறிமுக படுத்தியுள்ளார்கள் விரைவில் ஆப்பிள் (IOS) வெளியிட இருக்கிறார்கள்.
மேலும் இதன் சிறப்பம்சமாக வீட்டில் வியாபாரம் செய்யும் (cloud kitchens) போன்ற விற்பனையாளர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.
உங்கள் கருத்துக்கள் மற்றும் செயலியில் உங்கள் உணவகங்கள் மற்றும் பிற வியாபாரத்தை இணைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி என்னை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புக்கு : +91 8807118876