சீர்செய்யப்பட்டது ஆலடித்தெரு சாலை!

அதிராம்பட்டினம் 6வது வார்டு உட்பட்ட ஆலடித்தெரு சாலை மழையினால் மிகவும் மோசமான நிலையில் உள்ளது மேலும் அப்பகுதி மக்கள் நடப்பதற்கு பெரும் சிரமமடைந்து வருகின்றனர் இதனை நகராட்சி சீர்செய்யுமா என்று (14/11/2024) அன்று டைம்ஸ் ஆஃப் அதிரை ஊடகத்தில் செய்தி வெளியிட்டு இருதோம், அதனை தொடர்ந்து டைம்ஸ் ஆஃப் அதிரை சார்பாக கவுன்சிலரிடம் கோரிக்கையும் வைத்திருந்தோம்.

இதனை தொடர்ந்து 6வது வார்டு கவுன்சிலர் கனீஸ் பாத்திமா அகமது காமில் அவர்கள் மழையினால் சேதமடைந்த சாலையில் தற்காலிகமாக எம்-சாண்ட் மணல் அடித்து சாலையை சீரமைத்துள்ளார் மேலும் மழைக்காலம் முடிந்தவுடன் புதிய சாலை அமைத்து தருவதாகவும் கூறியுள்ளார்.

Prayer Times

Advertisement