அதிரை டூ சென்னை அரசின் நேரடி AC பேருந்து!! TNSTC அப்பிலும் இனி புக்கிங் செய்யலாம்!!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 18th April 2024, 11:35 pm

அதிரையை சேர்ந்த சமூக ஆர்வலர் அஹமது இர்ஷாத் அவர்கள் CM செல்லிற்கு பொது நலன் கருதி அனுப்பிய கடிதம் பின்வருமாறு…

சென்னையிலிருந்து அதிராம்பட்டினம் (தஞ்சாவூர் மாவட்டம்) வரையிலான வந்து செல்லும் அரசு விரைவு பேருந்து (தடம் எண் 333) என்ன காரணத்திலோ தெரியவில்லை, கடந்த பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எங்கள் மக்கள் அதில் பயணித்து போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் ஈட்டி தந்தார்கள்.

தயவுகூர்ந்து அந்த வழித்தடத்தில் மீண்டும் அதே வகையிலான புதிய வெள்ளை நிற பேருந்தை (SETC) இயக்க உத்தரவிடுங்கள். எங்கள் மக்கள் சார்பாக பல ஆண்டுகளாக கோரிக்கையை ஒற்றை ஆளாய் நான் இங்கு வைக்கிறேன். நல்ல வருவாய் ஈட்டக்கூடிய வழித்தடம் ஐயா இது.

மாண்புமிகு முதல்வர் அவர்களே. எங்கள் ஊர் மக்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்ற ஆவண செய்யுங்கள். நன்றி!

இதனை பார்வையிட்ட அதிகாரிகள், உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு விரைவில் அரசு விரைவு பேருந்து இயக்கப்படும் என தகவல் அளித்துள்ளனர்… மேலும் கடந்த பிப்ரவரி மாதம் போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்த முன்னாள் பேரூர்மன்ற தலைவர் S.H.அஸ்லம் அதிரையிலிருந்து சென்னைக்கு நேரடி பேருந்து சேவையை அரசு மீண்டும் துவக்க கோரிக்கை விடுத்தார். அதுமட்டுமின்றி அதிரை waha ஹசன் சமீபத்தில் சென்னையில் உள்ள பல்லவன் விடுதியில் அதிரை சென்னை வழித்தடத்தில் பேருந்து சேவை மீண்டும் வேண்டும் என கோரிக்கை மனுவை அளித்திருந்தார்.

இந்நிலையில், அதிரை மக்களின் பல நாள் கோரிக்கையை கடந்த 15/03/2024 முதல் அதிரையிலிருந்து சென்னைக்கு நேரடி புதிய குளிரூட்டப்பட்ட அரசு பேருந்து சேவை துவக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது..

இந்நிலையில் சமீபத்தில் விடப்பட்ட அதிராம்பட்டினம் – சென்னை SETC பேருந்து (ஏசி) SETC மொபைல் ஆப்’ல் வரிசையில் வராமல் இருந்தது.

இதனை அதிரையை சேர்ந்த சமூக ஆர்வலர் அஹமது இர்ஷாத் அவர்கள் SETC போக்குவரத்து மேலாண்மை நிறுவன முகநூல் குழுமத்தில் கவனத்திற்க்கு கொண்டு சென்று. தற்போது அந்த ஆன்லைன் புக்கிங் வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது.

நமதூர் பயணிகள் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். டிக்கெட் புக் செய்யும்பட்சத்தில் அதிராம்பட்டினம் வந்து அந்த பேருந்து சென்னை செல்லும். ஆகவே பயன்படுத்தினால் மட்டுமே நல்லது என்று கேட்டுக்கொண்டார்.

Follow US

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter