இன்சாட்-3DS ராக்கெட் ஏவுகணை நிகழ்வில் இமாம் ஷாஃபி (ரஹ்) மாணவர்கள் பங்கேற்பு வானிலை மாறுபாடுகளை கண்காணிப்பதற்கான அதிநவீன இன்சாட்-3DS செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப் 14 எஸ் ராக்கெட் 17/02/2024 சனிக்கிழமை அன்று மாலை 5.30 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்நிகழ்வில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உள்ள STEM ( Science, Technology, Engineering and Mathematics) ஆய்வகத்தில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படும் 50 மாணவர்கள் மற்றும் 5 ஆசிரியர்கள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்திற்கு நேரிடையாக சென்று பங்கேற்றனர்.
இந்த ராக்கெட் ஏவுதல நிகழ்ச்சியில் பங்கேற்றது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாகவும் விண்வெளி ஆராய்ச்சியைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு மிகப் பெரிய வாய்ப்பாக இருந்தது எனவும் மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பினை உருவாக்கி கொடுத்த பள்ளி நிர்வாகத்திற்கு தங்களது நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் பங்கேற்ற மாணவர்கள் கூறினார்கள்.
Great write-up! The points discussed are highly relevant. For those wanting to explore more, this link is helpful: FIND OUT MORE. What are your thoughts?
Very insightful piece! Its always great to see well-researched articles like this. Lets discuss further. Check out my profile!