அதிரை மகாதிப் ஆசிரியர்களின் ஆலோசனை கூட்டம்! எடுக்கப்பட்ட முடிவுகள்?

உலகம் முழுவதும் ஏறத்தாழ 28 நாடுகளில் 18 மொழிக்கும் மேலாக மொழியாக்கம் செய்யப்பட்டு மிகச் சிறப்பாக நடைபெறக்கூடிய இஸ்லாமிய அடிப்படை மார்க்க கல்வியை போதிப்பதற்கு என உருவாக்கப்பட்ட ஓர் பாடத்திட்டம் தான் 15 வருடங்கள் கொண்ட தீனியாத் பாடத்திட்டம்.

இது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய புரட்சியாக கருதப்படுகிறது.

அல்ஹம்துலில்லாஹ் இந்த பாடத்திட்டம் தமிழகத்தில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட ஊர்களில் நமது ஊரும் ஒன்றாகும் ஏறத்தாழ 15 ஆண்டுகள் நமது ஊரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றது இதன் மூலம் பிள்ளைகளிடத்தில் மிகப்பெரிய மாற்றத்தையும் அதிகமாக ஹாஃபிழ்கள் உருவாகக்கூடிய சூழ்நிலையையும் ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நாம் அறிவோம்.

நமது அதிரை மகாதிப் ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டத்தில் பின் வரும் விஷயங்கள் முடிவு செய்யப்பட்டது.

📚 முழு ஆண்டு பரீட்சை தேதி பிப்ரவரி 24 முதல் 28 வரை.

📚 முழு ஆண்டு விடுமுறை ஷஃபான் பிறை 23 அதாவது மார்ச் 5 ஆம் தேதியிலிருந்து.

📚 மீண்டும் மக்தப் மதரஸா ஷவ்வால் பிறை 10 ல் திறக்கப்படும்.

📚 வரக்கூடிய2024 பிப்ரவரி ஏழு, எட்டு இரு தினங்கள் இஜ்திமாவிற்காக வேண்டி ஆண்கள் மக்தபிற்கு மட்டும் விடுமுறை விடப்படும்.

2 comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times