டைம்ஸ் ஆஃப் அதிரை கிராஅத் போட்டி: வீடியோ அனுப்புவதற்குண்டான கால அவகாசம் நீட்டிப்பு!!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 25th December 2023, 11:52 pm

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் டைம்ஸ் ஆஃப் அதிரை நடத்தும் இரண்டாம் ஆண்டு அல்-குர்ஆன் கிராஅத் போட்டி கடந்த 25/11/2023 அன்று அறிவிக்கப்பட்டு 25/12/2023 இன்று இரவு 12:00 மணிக்குள் தங்கள் விடியோக்களை அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டது, இந்நிலையில் சில தினங்களுக்கு முன்புதான் பள்ளி/கல்லூரி தேர்வுகள் முடிந்துள்ளது, ஆகையால் வீடியோ அனுப்புவதற்கான கால அவகாசத்தை நீடித்தால் நன்றாக இருக்கும் என்று சில பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்தனர், அதன் அடிப்படையில் இப்போட்டியின் இரு பிரிவுகளுக்கும் வீடியோ அனுப்புவதற்குண்டான கால அவகாசம் வருகின்ற 05/01/2024 வரை நீடிக்கப்பட்டுள்ளது.


போட்டியில் பங்கு பெற விருப்பம் உள்ளவர்கள் 05/01/2024 வெள்ளிக்கிழமைக்குள் தங்கள் விடியோக்களை அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதன் பின்னர் அனுப்பப்படும் வீடியோக்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.


முதல் பிரிவு :
14 வயது முதல் 17 வயது வரை!


இரண்டாம் பிரிவு :
18 வயது முதல் முதியவர்கள் வரை அனைவரும் கலந்துகொள்ளலாம்!


குறிப்பு : போட்டியாளர்களிடம் அனுமதி பெற்ற பின்னரே போட்டியாளர்களின் வீடியோ டைம்ஸ் ஆஃப் அதிரை youtube பக்கத்தில் வெளியிடப்படும். அனுமதி மறுத்தால் youtube பக்கத்தில் upload செய்யப்பமாட்டாது.


வீடியோ அனுப்புவதற்குண்டான வாட்ஸ்அப் எண் : wa.me/919994222582


விதிமுறைகள்:-


🔹இந்தப் போட்டி ஆண்களுக்கானது மட்டுமே. மேலும் உலகெங்கிலும் உள்ள அதிரையர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்!


🔹அல் குர்ஆனின் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு சூராக்களில் ஏதேனும் ஒரு சூராவை மூன்று நிமிடத்திற்குள் தெளிவான உச்சரிப்பு, தஜ்வீத் மற்றும் கிராஅத்துடன் ஓதவேண்டும்.


🔹போட்டியாளர்களின் வீடியோ மற்றும் ஆடியோ தெளிவாக இருக்க வேண்டும்.


🔹போட்டியாளர்களின் அனுமதி பெற்ற பின்னரே அவை TIMES OF ADIRAI யூடியூப் பக்கத்தில் பதிவேற்றப்படும்.


🔹 05/01/2024 வெள்ளிக்கிழமை இரவு 12:00 மணிக்குள் தங்கள் விடியோக்களை அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதன் பின்னர் அனுப்பப்படும் வீடியோக்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.


🔹போட்டியாளர்களின் வீடியோ, முழுப் பெயர், தந்தை பெயர், வயது மற்றும் முகவரி ஆகியவற்றை Whatsapp (+919994222582).


🔹இறுதிச் சுற்றுக்கு இருப் பிரிவுகளில் இருந்தும் தலா பத்து நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


🔹இறுதிச் சுற்று நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.


🔹நடுவர் குழுவின் முடிவே இறுதியானது.

மேலும் விபரங்களுக்கு :- 9994222582

Follow US

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter

error: Content is protected !!