அமெரிக்க அதிரை மன்றத்தின் (AAF) பத்தாம் ஆண்டு நிறைவு குளிர்காலச் சந்திப்பு கூட்டம் வியாழக் கிழமை (23/11/2023) அன்று கலிஃபோர்னியா மாகாணம் வல்லேஹோ நகரில் அமைந்துள்ள இஸ்லாமிய மையத்தில் நடைபெற்றது.
லுஹர் தொழுகைக்கு பிறகு சுவையான மதிய உணவு என நிகழ்ச்சிக்கு பங்கேற்க வருகை தந்த அமெரிக்க வாழ் அதிரையினர் மற்றும் அனைவருக்கும் (வந்திருந்த அதிரையருக்கு) மனமகிழ்ச்சியுடன் பரிமாறப்பட்டன.
பின்னர், ஜாபீர் அகமது S/o. அகமது சலீம் அவர்களின் அழகிய கிராத்துடன் கூட்டம் தொடங்கியது. நடைபெற்ற கூட்டத்தில் 2023 ஆம் ஆண்டு வெற்றிகரமாக செய்து முடித்த செயல் திட்டங்கள், நிதிநிலை அறிக்கை மற்றும் நமது ஊரில் நடைபெற்று வரும் மக்தப் மத்ரசா, அதன் முக்கியத்துவம் மற்றும் அதன் நிதிநிலை உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்பட்டு தலைவர் அகமது சலீம் அவர்களால் முடிவுகள் எடுக்கப்பட்டன. கூட்டதில் துணை தலைவர் பரகத் உதுமான், செயலாளர் நஜூமுதீன், துணை செயலாளர் அப்துல் ஜப்பார், பொருளாளர் அப்துல் ரவூப் மற்றும் நமது ஊரை சார்ந்த சகோரத சகோதரிகள் மற்றும் ஏராளமான இளைங்கர்கள் கலந்து கொண்டனர்கள் . பின்னர் கஃப்பாராவுடன் கூட்டம் முடிந்து, சூடான தேநீர் பரிமாறப்பட்டது.
மேலும், இந்த வருடம் கடந்த ஆகஸ்டு மாதம் அமெரிக்க அதிரை மன்றத்தின் (AAF) 10ஆம் ஆண்டு நிறைவு விழா கலிஃபோர்னியா மாகாணம் பெனிசியா நகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குர்ஆன் ஓதுதல் மற்றும் விளையாட்டு போட்டி, ஓவிய போட்டிகளும் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவருகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Very well written! The points discussed are highly relevant. For further exploration, check out: LEARN MORE. Keen to hear everyone’s opinions!
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.