அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த ஆண்டு டைம்ஸ் ஆஃப் அதிரை சார்பாக முதன்முதலில் 3 வயது முதல் 13 வயது வரை உள்ள சிறுவர்க சிறுமியருக்காக மூன்று பிரிவுகளில் அல்-குர்ஆன் கிராஅத் போட்டி சிறப்பாக நடைபெற்றது. அதில் 350க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அல் குர்ஆனை அழகாக ஓதி, பரிசுகளை வென்றனர்.
இந்த ஆண்டும் (2023), அதனைத் தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக அல்-குர்ஆன் கிராஅத் போட்டி இரண்டு பிரிவுகளில் நடைபெற உள்ளது. எனவே, இளைஞர்கள், பெரியவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் வேதத்தை அழகிய முறையில் ஓதி அனுப்ப தயாராகுங்கள். மேலும் இந்தப் போட்டி குறித்து மற்றவர்களுக்கும் பகிர்ந்து, அனைவரும் பங்கேற்க ஊக்குவியுங்கள்!!
பிரிவு 1: (14 வயது முதல் 17 வயது வரை)
முதல் பரிசு: FRIDGE
இரண்டாம் பரிசு: CYCLE
மூன்றாம் பரிசு: FABRIC DRAWER
முதல் பிரிவிற்குண்டான சூராக்கள்
1) சூரா அல்-பலத் - سورة البلد
2) சூரா அல்-கியாமா - سورة القيامة
3) சூரா அத்தாரிக் - سورة الطارق
4) சூரா அர்ரஹ்மான் - سورة الرحمن
பிரிவு 2 - (18 வயதிற்கு மேலுள்ள அனைவரும்)
முதல் பரிசு: FRIDGE
இரண்டாம் பரிசு: WASHING MACHINE
மூன்றாம் பரிசு: AIR COOLER
இரண்டாம் பிரிவிற்குண்டான சூராக்கள்
1) சூரா யாஸீன் - سورة يس
2) சூரா அல்-அஃலா - سورة الأعلى
3) சூரா அஷ்ஷம்ஸ் - سورة الشمس
4) சூரா அல்-ஜில்ஜால் - سورة الزلزال
இரு பிரிவிலும் இறுதிசுற்றுக்குத் தகுதி பெரும் நபர்களுக்கும் மேலும் 100 நபர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்!
போட்டியின் விதிமுறைகள் பின்வருமாறு!
🔹இந்தப் போட்டி ஆண்களுக்கானது மட்டுமே. மேலும் உலகெங்கிலும் உள்ள அதிரையர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்!
🔹அல்-குர்ஆனின் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு சூராக்களில் ஏதேனும் ஒரு சூராவை மூன்று நிமிடத்திற்குள் தெளிவான உச்சரிப்பு, தஜ்வீத் மற்றும் கிராஅத்துடன் ஓதவேண்டும்.
🔹போட்டியாளர்களின் வீடியோ மற்றும் ஆடியோ தெளிவாக இருக்க வேண்டும்.
🔹வீடியோக்கள் எங்கள் டைம்ஸ் ஆஃப் அதிரை (TIMES OF ADIRAI) YOUTUBE சேனலில் ஒளிபரப்பப்படும்.
🔹இப்போட்டியில் பங்கு பெறக்கூடியவர்கள் TIMES OF ADIRAI YOUTUBE சேனலை SUBSCRIBE செய்திருக்கவேண்டும்.
🔹25/11/2023 முதல் 25/12/2023 இரவு 12:00 மணிக்குள் அனுப்ப வேண்டும். அதன் பிறகு அனுப்பப்படும் வீடியோக்கள் ஏற்றுக்கொள்ளப்படாது!
🔹போட்டியாளர்களின் வீடியோ, முழுப் பெயர், தந்தை பெயர், வயது மற்றும் முகவரி ஆகியவற்றை Whatsapp (9994222582)
🔹வீடியோ Landscape முறையில் எடுக்கப்பட வேண்டும். Portrait முறையில் அனுப்பப்படும் வீடியோக்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
🔹இறுதிச் சுற்றுக்கு இருப் பிரிவுகளில் இருந்தும் தலா பத்து நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இறுதிச் சுற்று நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
🔹நடுவர் குழுவின் முடிவே இறுதியானது.
குறிப்பு: பிரிவு 1: குர்ஆனை முழுமையாக மனனம் செய்த ஹாஃபிழ்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை.
பிரிவு 2: ஹாஃபிழ்கள், ஆலிம்கள் மற்றும் முழுநேர & பகுதி நேர மத்ரஸாக்களில் குர்ஆனை மனனம் செய்யக்கூடிய மாணவர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை.



Comments (100)
Son IA analyse les marches en temps reel, identifie les opportunites et applique des tactiques complexes avec une finesse et une celerite inaccessibles aux traders humains, augmentant de ce fait les perspectives de gain.
ACA 203 is not simply another event on the circuit; it is a crossroads .
Write a comment