தொடரும் server down பிரச்சனை! எப்போ சரி ஆகும்னே தெரியாது – இந்தியன் வங்கி ஊழியர்!

அதிராம்பட்டினம் சேர்மன் வாடியில் இயங்கி வரும் இந்தியன் வங்கியில் கடந்த 07/09/2023 வியாழக்கிழமை அன்று முதல் இன்று வரை நான்கு நாட்களாக server down என்று கூறிவருவது தொடர் கதையாக இருக்கிறது…

இந்நிலையில் இன்று டைம்ஸ் ஆஃப் அதிரை ஊடக ஆசிரியர் நேரில் சென்று இந்தியன் வங்கி ஊழியரிடம் விசாரித்த நிலையில் நாடு முழுவதும் புதிய server மாற்றப்பட்டுள்ளதால் தொடர்ந்து நான்கு தினங்களாக திடீர் திடீர் server down ஆகி விடுகிறது, எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை ஒரு மணி நேரம் வேலை செய்கிறது பிறகு ஒரு மணி நேரம் முடங்கிவிடுகிறது, இது எப்போழுது சரி ஆகும் என்று தெரியவில்லை என்று வங்கி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் பொதுமக்கள் பணம் எடுப்பதற்கும், போடுவதற்கும், balance பார்ப்பதற்கும் நீண்ட நேரமாக வரிசையில் காத்து வருகின்றனர்…

2 comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times