செக்கடி குளத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்! பெற்றோர்களே எச்சரிக்கையாக இருங்கள்!

நேற்று 09/09/2023 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் செக்கடி குளத்திலிருந்து சிறுவனின் காப்பாத்துங்க காப்பாத்துங்க என அபாயக் குரல் ஒலிக்க அங்கு நடைப் பயிற்ச்சி மேடையில் நடந்து கொண்டிருந்த ஒரு சகோதரர் ஒருவர் எங்கிருந்து யாரு கத்துறா என்று பார்த்த போது. ஒரு சிறுவன் தரை மட்டத்தில் கிடக்கும் தண்ணீரில் இறங்கி செல்ல சேற்றில் புதையுண்டு போகவே அவனால், மீண்டும் வர இயலாத நிலையில் கதறவே அந்த சகோதரர் விரைந்து சென்று அச்சிறுவனை இறைவனின் உதவியால் மீட்டெடுத்திருக்கிறார்.

தற்பொழுது செக்கடிகுளம், மரைக்காகுளம், காட்டுக்குளம், ஆலடிக்குளம் என பெரும்பாலான குளங்களில் தண்ணீர் குறைவாகவும் அத்துடன் சேரும் சகதிமாக காணப்படுகிறது.

எனவே தங்கள் வீட்டு சிறார்களை தனியாக இது போன்ற குளங்களுக்கு அனுப்புவதை தவிர்த்து கொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டுகிறோம். எந்த துன்பமும் துயரமும் வந்த பின் அழுது புழம்புவதை விட வரும் முன் காப்பதே சிறந்தது.

குழந்தைகளை வெளியில் அனுப்ப தேவைகள் ஏற்ப்படும் போது நபி (ஸல்) அவர்கள் கற்று தந்த துஆ வை ஓத சொல்லி வீட்டை விட்டு வெளியில் அனுப்பி வையுங்கள். வீடு திரும்பும் வரை அல்லாஹ் பாதுகாப்பதற்க்கு போறுப்பேற்று கொள்கிறான்.

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times