தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சியான அதிராம்பட்டினம் பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து விளங்குகிறது. 40 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இப்பகுதியை தாலுக்காவாக அறிவிக்க வேண்டும் என்பது எங்கள் ஊர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது
தஞ்சாவூர் மாவட்டத்தின் 2 நகராட்சிகளுல் ஒன்று அதிராம்பட்டினம். தஞ்சாவூர் மாவட்டத்தில் மீனவர்கள் அதிகம் வசிக்கும் பெரிய ஊர். கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியிருக்கும் பகுதி. ஏராளமான கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் என பல்வேறு சிறப்புகளை கொண்டது. இவ்வளவு வசதிகள் இருந்தும் தாலுக்காவாக இல்லாததால் எல்லாவற்றுக்கும் 12 கிமீ தொலைவில் உள்ள பட்டுக்கோட்டையை நாடி இருக்க வேண்டியுள்ளது. தாலுக்கா அமைந்தால் இங்கு தொழில் வளர்ச்சியும் பெருகும்
அந்த அறிவிப்பின்படி இங்குள்ள விவசாய, மீனவ மக்களின் நலன் கருதி அதிராம்பட்டினத்தை தாலுக்காக அறிவிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இதுவரை அறிவிக்கப்படாமல் உள்ளது.
அதிராம்பட்டினத்தை தாலுக்காவாக அறிவித்தால் என்ன நன்மைகள்?
தாலுக்கா அலுவலகம் அமைந்தால், அதிரைக்கு அனைத்திலும் முன்னுரிமை கிடைக்கும். ஆவணங்களுக்காக பட்டுக்கோட்டைக்கு அலைய தேவையில்லை. தொழில் வளர்ச்சியடையும். பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இப்படி இருக்க, மக்களை வரிச்சுமையில் தள்ளும் வகையில் நகராட்சியாக அறிவித்துவிட்டு தாலுக்காவாக அறிவிக்காதது ஏன்? என மக்கள் எம்.எல்.ஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மெயில் அனுப்பும் திட்டம்:
அதிராம்பட்டினத்தை தாலுக்காக அறிவிக்க வேண்டும் என ஒரே கிளிக்கில் முதலமைச்சர் ஸ்டாலின், தலைமை செயலாளர், வருவாய் துறை அமைச்சர், வருவாய் துறை செயலாளர், வருவாய் துறை ஆணையர், மாவட்ட ஆட்சியர், பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ., பட்டுக்கோட்டை RDOவுக்கு ஒரே கிளிக்கில் மெயில் அனுப்பும் வசதியை அதிரை பிறை அறிமுகம்படுத்தியது அதிரை எக்ஸ்பிரஸ்-ம் இதற்கான முயற்சி மேற்கொண்டது அதனை தொடர்ந்து டைம்ஸ் ஆஃப் அதிரை சார்பில் இதற்கான முயற்சி மேற்கொள்ளபாட்டுவருகிறது, கீழே உள்ள பட்டனை அழுத்தினால் உங்கள் ஜிமெயில் திறக்கும். அதில் சென்று SEND பட்டனை அழுத்தினால் மெயில் சென்றுவிடும்.
Great mix of humor and insight! For more, visit: READ MORE. What do others think?
This article was very informative and engaging. Im eager to hear others’ opinions. Che