தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் – அன்பில் மகேஷ்

தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், இன்றுமுதல் கத்திரி வெயில் தொடங்கப்பட்டுள்ளதால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே பள்ளியை முடிக்க கோரிக்கைகள் எழுந்தனர். நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தினார்கள். இதில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக்கு பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட தகவலில், “வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால், 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் நாளைமுதல் வழக்கமான வகுப்பிற்கு பள்ளிகளுக்கு வர தேவையில்லை. தேர்வு நடைபெறும் நாள்களில் மட்டும் பள்ளிகளுக்கு வந்தால் போதும்” எனத் தெரிவித்துள்ளார்

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders