மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய நிருவாகிகள் தேர்வு மற்றும் ஐந்து முக்கிய தீர்மானங்கள் முடிவு!!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 14th August 2023, 08:25 am

அதிராம்பட்டினம் மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர நிர்வாகிகள் கூட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்மார்ட் சாகுல் தலைமையில் நடைபெற்றது. நேற்று 13/08/2023 அன்று நடைபெற்றது, இக்கூட்டத்தில் நகர நிர்வாகம் சீரமைக்கப்பட்டு புதிய நகர நிர்வாகிகளாக கீழ்க்கண்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

நகர அவைத்த லைவர் : A.j.ஹலில் அஹமத் 8838238432

நகரச் செயலாளர் : N.முகமது பாசித் 9003336393

நகரப் பொருளாளர் ரிஜ்வான் : 7708016086

நகரத் துணைச் செயலாளர் : பஷீர் அகமது 8220925443.

நகரத் துணைச் செயலாளர் : முகமது ராவுத்தர் 9629888091

நகரத் துணைச் செயலாளர் : புரோஸ் கான் 8525926449

தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அஜ்மல் கான் : 9790653856

நகர இளைஞரணி செயலாளர் : ரியாஸ் கான் 7339535663

ஆகியோர் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை A.ஷேக் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் பைசல் அஹமத் ஆகியோர் கலந்து கொண்டனர்
இக்கூட்டத்தில் கீழ் வரும் தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

  1. ஹரியானாவில் பிஜேபி ஆர் எஸ் எஸ் சங்பரிவார்களால் நடத்தப்படுகின்ற கலவரங்களை தடுக்க திராணியில்லாத பிஜேபி அரசாங்கத்தை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
  2. நாங்குநேரியில் சாதி வெறியர்களால் தாக்கப்பட்ட மாணவருக்கு இக்கூட்டம் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது. சாதி வெறியர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
  3. அதிரையில் சமீப காலமாக முன்னறிவிப்பின்றி மின்தடை ஏற்படுகிறது. மின்சார வாரியம் மின்தடை இல்லா அதிரை நகரத்தை உருவாக்க வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
  4. அதிரையில் கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெறுவதால் அதிரை காவல்துறை கஞ்சா விற்பனையை தடுத்து நிறுத்திட வேண்டுமென்று. இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
  5. அதிராம்பட்டினம் நகராட்சி சார்பாக பேருந்து நிலையத்தை சுற்றி கட்டப்பட்டிருக்கும் கடைகளை பொது ஏலம் விட்டு மக்கள் பயன்பாட்டிற்கு விடும்படி அதிரை நகராட்சியை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

Follow US

Stay Connected

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Playlist

7 Videos