சீரழியும் முஸ்லிம் சமுதாயம்; ஷைத்தானுக்கே ஆதாயம்!!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 19th June 2023, 07:10 pm

காலையில் ஏழு மணிக்கு மதரஸாசுக்குச் சென்ற சமுதாயம் – இன்று பள்ளி வாகனத்திற்காகக் காத்து நிற்கிறது.

ஆம், குர்ஆன் ஓதத் தெரியாத ஒரு சமுகம், உருவாகிக்கொண்டிருக்கிறது.

மாலையில் வீட்டில் ஓதிய எமது சமூகம் – இன்றுடியூசன் சென்று கொண்டிருக்கிறது.

ஆம், குர்ஆன் ஓதத் தெரியாத ஒரு சமுகம், உருவாகிக்கொண்டிருக்கிறது.

பள்ளிக்கூடம் விட்டதும் நம் சமூகம் -இன்று தெருமுனைகளில் பலர் சூழ அரட்டையில்…

ஆம், இஸ்லாம் தெரியாத ஒரு சமுகம், உருவாகிக்கொண்டிருக்கிறது.

பருவம் வாராச் சிறுவனிடம் இன்று பல பாலியல் படங்கள் – வாப்பா ஆசையாய் வாங்கிக் கொடுத்த ஆன்ட்ராய்டு. போனில்..

ஆம், இறைமறை தெரியாத ஒரு சமுகம் உருவாகிக் கொண்டிருக்கிறது.

வாப்பாஅயல்நாட்டில்.. உம்மா டிவி நாடகத்தில்.. பிள்ளைகள் தெரு முனைகளில்..

ஆம், மார்க்கம் தெரியாத ஒரு சமுகம் உருவாகிக் கொண்டிருக்கிறது.

கைப்பந்து,கால்பந்து, கிரிக்கெட் என மும்முரமாய் எம் சமூகம் தவறில்லை – பள்ளிவாசலுக்கு அழைத்தால் மட்டும் நேரமில்லை என்ற பதில்….

ஆம், தொழத் தெரியாத ஒரு சமுகம் உருவாகிக் கொண்டிருக்கிறது.

மகனைத் திருத்த முடியாத தந்தை, மனைவியை கண்டிக்க இயலாத கணவன்-கட்டுப்பாடு இல்லாத குடும்பம்.

ஆம், ஒழுக்கம் இல்லாத ஒரு சமுகம் உருவாகிக் கொண்டிருக்கிறது.

தன் “கெத்தைக்” காட்ட வேகமு ஓட்டும் மோட்டார் பைக்.. மங்கையர் பார்க்க தலையில், கரையான் தின்றது போன்ற முடி..

ஆம், கஷ்டம் தெரியாத ஒரு சமுகம் உருவாகிக் கொண்டிருக்கிறது.

சப்தமில்லாமல் ஒரு சமூகம் வீணாய்ப்போய்க்கொண்டிருக்கிறது. பெற்றோர்களாகியநம்மால், உருவாகிக்கொண்டிருக்கிறது…

ஆம், நம்மால் ஒரு சமுகம் வீணாகப் போய்க் கொண்டிருக்கிறது.

காலம் கடக்கும் முன், நீங்கள் விழித்துக் கொள்ளுங்கள் நம் சமூகத்தைக் காத்துக் கொள்வோம்.

உங்கள் குழந்தைகள் வளர வளர உங்களை விட்டு விலகிச்சென்று கொண்டிருக்கின்றார்கள் எச்சரிக்கை.. கவனம்..!

பெற்றோர்களே பேணிக் கொள்ளுங்கள் அவசியம்! அவசரம்…!

எம் சமூகம் சரியாய் வளர பெரிதாய் ஒன்றும் செய்ய வேண்டாம்…

பள்ளிவாசலோடு மட்டும் தொடர்பை ஏற்படுத்துங்கள்… ஆம், பள்ளிவாசலோடு மட்டும் தொடர்பை ஏற்படுத்துங்கள்…

பாங்கு சொன்னவுடன் பள்ளிக்கு வரச் சொல்லுங்கள்.
எம் சமூகம் இந்த உலகை ஆளும்.. இன்ஷா அல்லாஹ்…

Follow US

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter