கடற்கரை ஜும்ஆ மஸ்ஜித் 15ஆம் ஆண்டு நிறைவு விழா நேற்று 02-07-2025 மாலை 5:00 மணி அளவில் முப்பெரும் விழாவாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 14 ஆண்டுகளுக்கு மேல் கடற்கரை ஜும்ஆ மஸ்ஜித் முஹல்லாஹ்வின் பல பொறுப்புகளை ஏற்று பல இன்னல்களைக் கடந்து செம்மையாக சிறந்த முறையில் நிர்வாகிகளை வழி நடத்தி வந்த மரியாதைக்குரிய தலைவர் V.M.A. அகமது ஹாஜா (த.பெ.அப்துல் காசிம்) அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்ச்சியும்.
நமது முஹல்லாஹ்வில் 10 & 12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு பரிசளித்து இன்னும் பல சாதனைகள் புரிய வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகவும்,
நமது மஸ்ஜித் கட்டி முடித்து திறப்பு விழா கண்டது 02-07-2010 அன்று.இதனை வருங்கால நம் சந்ததியினர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் கல்வெட்டு நிகழ்ச்சி என முப்பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முஹல்லாவாசிகள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.































