ஹிதாயதுல் இஸ்லாம் மக்தப் மதரஸாவின் 25-ஆம் ஆண்டு துவக்க விழா, ஹிஃப்ழு பிரிவு 6-ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் மாணவர்களின் பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா இன்ஷா அல்லாஹ் (04-07-2025) வெள்ளிக்கிழமை ஹிஜ்ரி – 1447 முஹர்ரம் பிறை 8 இன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை ரஹ்மானி மஸ்ஜித் வளாகத்தில் நடைபெற உள்ளது.
அது சமயம் “செல்போன் சிறார்களை சீரழிக்கிறதா? சீராக்குகிறதா?” என்ற தலைப்பில் பட்டிமன்றமும், தமிழ், உருது, அரபி ஆகிய மொழிகளிலும் மாணவர்களின் பல்சுவை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
இந்நிகழ்ச்சிக்கு ஹாஜி பரகத்துல்லாஹ் (தலைவர் ரஹ்மானி மஸ்ஜித்) அவர்கள் தலைமை தாங்குகின்றனர்
இந்நிகழ்ச்சிக்கு மௌலானா மௌலவி அல்-ஹாஃபிழ் அப்துல் ஹக் காஷிஃபி (இமாம் கலீஃபா உமர்(ரலி) மஸ்ஜித் – அதிராம்பட்டினம்.) அவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்
அனைவரும் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியினை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இப்படிக்கு
தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள்

