நாளை வெளியாகிறது 10, 11ம் வகுப்பு பொது தேர்வு ரிசல்ட்!! செக் செய்வது எப்படி?

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 2022-23ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற்றது.

இந்தத் தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து 9 லட்சத்து 76 ஆயிரத்து 89 மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். இதில் ஆங்கில பாடத்தில் தவறாக கேட்கப்பட்ட 3 மதிப்பெண், ஒரு 2 மதிப்பெண் கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 17ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், பின்னர் 19ம் தேதி வெளியாகும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருந்தார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், ’10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 19ம் தேதியும், 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 17ம் தேதி வெளியாகும். இதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், 19ம் தேதியே இரண்டு தேர்வுகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 19ஆம் தேதி 10 & 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியது. அதன்படி, நாளை 19ஆம் தேதி காலை 10 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும். 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கு வெளியாக உள்ளது.

முன்னதாக, தமிழகத்தில் கடந்த 8ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், மொத்தமாக 8,03,385 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில் 7,55,451 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

அதில் 47 ஆயிரத்து 387 பேர் தோல்வி அடைந்துள்ளனர். இந்நிலையில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஜூன் 19ம் தேதி முதல் துணைத்தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தோல்வி அடைந்த மாணவர்கள் மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் வரும் மே 15ம் தேதி முதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று முதல் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்றோடு அவகாசம் முடிந்த நிலையில் இன்று முதல் தட்கல் வழியாக விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

10th 11th வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் லிங்க் இதோ!!

www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in

2 comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times