இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பொன்விழா ஆண்டில் மாணவக்கண்மணிகள் மற்றும் ஆசிரியப் பெரு மக்கள் பள்ளிக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் அளித்துள்ள மாபெரும் பரிசு + 2 தேர்வில் அதிராம்பட்டினத்திலேயே நமது பள்ளி மட்டுமே 100% சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளது என்ற பெருமையைத் தேடித் தந்துள்ளதுதான்.
இதற்கு முந்திய ஆண்டுகளிலும் நாம் 100% தேர்ச்சி பெற்று இருந்தாலும் இந்த பொன்விழா ஆண்டில் பெற்றது தனிச் சிறப்பு.
நான் 40 ஆண்டு காலமாக இமாம் ஷாஃபி பள்ளியின் Wel wisher என்ற வகையிலும் 4 ஆண்டுகள் பள்ளியின் Director என்ற வகையிலும் இரட்டிப்பு மகிழ்வெய்துகிறேன். அல்ஹம்து லில்லா.
இத்தனை ஆண்டுகளாக அப்பழுக்கற்ற தூய நிர்வாகம் நடத்தி பள்ளியை கல்வியால், ஒழுக்கத்தால், கட்டிடங்களால் வளர்ச்சி அடையச்செய்து, இஸ்லாமிய ஒழுக்க நெறிகளுக்கு மாறுபாடு இல்லாத வண்ணம் பள்ளியை இதுவரை நடத்திவரும் MST ஹாஜியார் அவர்கள் தலைமையில் இயங்கிவரும் நிர்வாகக் குழுவிற்கும் என் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து மகிழ்கிறேன்
என் மனதில் தோன்றுகிறது, நாம் வழக்கமாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு மட்டும் பரிசுகள் வழங்கிப் பாராட்டுகிறோம் அதேபோல் கடைசி மதிப்பெண் பெற்ற மாணவரையும் பரிசளித்துப் பாராட்ட வேண்டும் இந்த மாணவன் தோல்வி அடைந்திருந்தால் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளுகின்ற அந்த 100% நமக்குக் கிடைக்காமல் போயிருக்கும், இம்மாணவர் நம் பள்ளியின் மாணம் காத்த மாவீரன், இவரை உற்சாகம்படுத்தினால் தன்னை முன்னேற்றிக் கொள்ள முயற்சிப்பார்.
இவருக்குரிய தனிப்பரிசை இன்ஷா அல்லாஹ நான் வழங்குகிறேன், 100% தேரச்சிக்கு உழைத்த ஆசிரியப் பெருமக்கள், முதல்வர் ,ஆசிரியர்களோடு ஒத்துழைத்துப் படித்த மாணவ மாணவியர், இவர்களைப் படிக்க வைப்பதற்காக பள்ளியில் கொடுக்கும் அழுத்தங்களைச் சகித்துக் கொண்ட ,விளக்கம் நிறைந்த பெற்றோர், அதற்கும் மேலாக தூய பள்ளி நிர்வாகிகள் அனைவரையும் மனமாரப்பாராட்டி மகிழ்கிறேன்.
2030 க்கு முன்னால் 2 IAS IPS அதிகாரிகள் 10 டாக்டர்கள், 20 பொறியாளர்கள், 10 வழக்கறிஞர்கள், 10 பள்ளி ஆசிரியர்கள்,
5 கல்லூரிப் பேராசிரியர்கள், 5 போலீஸ் அதிகாரிகள் இப்படியாக பலதரப்பட்ட அரசுப் பணியாளர்கள் நம் இமாம் ஷாஃபி பள்ளியில் இருந்து உருவாக வேண்டும் என்ற திட்டவரைவை உருவாக்கிக் கொண்டு நாம் செயல்பட்டால் இன்ஷாஅல்லாஹ நமது லட்சியத்தில் நாம் வெற்றி பெறலாம். நம் பள்ளியை இந்த பொன்விழா ஆண்டில் பேறும் புகழும் பெறச்செய்யடமூளையாய் இருந்து செயல்பட்டு வரும் பள்ளியின் தாளாளர் முஹம்மத் ஆஸம் சார் அவர்களுக்கு அதிரை மக்களின் “Royal Salute “ இமாம் ஷாஃபி குழுமத்தின் வெற்றி மகிழ்வில் என்றும் பங்கேற்று மகிழும், பேரா.எம்.ஏ.அப்துல் காதர்.
Great mix of humor and insight! For more, visit: READ MORE. What do others think?
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.