TNPSCல் தேர்ச்சி பெற்ற அதிரை அபுல்கலாம் ஆசாத் பயிற்சி மைய மாணவர்கள்!

அதிரையில் கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மெளலானா அபுல் கலாம் ஆஸாத் கோச்சிங் சென்டர் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (TNPSC), ரயில்வே (RRB), காவலர் தேர்வு (SSC) உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு பயிற்றுவிக்கும் விதமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இப்பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வுகளில் வென்று இருக்கிறார்கள். இதில் சிலருக்கு அரசுப் பணிகளும் உறுதியாகி உள்ளது. வெற்றிபெற்ற மாணவர்கள் விபரம் பின்வருமாறு

குரூப் – 1 தேர்வு

1) அபுதாஹிர்

குரூப் – 2 தேர்வு (முதல் நிலைத் தேர்வு)

1) முஹம்மது அனஸ்
2) ரஹ்மதுல்லாஹ்
3) சிராஜுதீன்
4) செய்யது அபுதாஹிர்

குரூப் – 4 தேர்வு

1) சிராஜுதீன்
2) அபுதாஹிர்

அதிராம்பட்டினத்தில் இயங்கி வரும் இந்த மெளலானா அபுல் கலாம் ஆஸாத் கோச்சிங் சென்டர் நிறுவனத்தில் TNPSC, RRB, SSC, போலீஸ் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வரும் நிலையில் மேற்கண்ட மாணவர்கள் குரூப் தேர்வுகளில் வெற்றிபெற்றுள்ளனர். மேலும் குரூப் 2 முதல்நிலைத் தேர்வில் வென்றவர்கள் முதன்மை தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மெளலானா அபுல் கலாம் ஆஸாத் கோச்சிங் சென்டரில் 15 அதிரை மாணவர்கள் பயின்றார்கள். அவர்களும் TNPSC GROUP 4 முதல் தேர்விலேயே நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள். தற்போது ROAD INSPECTOR, COMBINED CIVIL ENGINEERING SERVICE மற்றும் SUBORDINATE ENGINEERING SERVICE ஆகிய பொறியாளர் தேர்வு எழுதியுள்ளார்கள். மேலும் மெளலானா அபுல்கலாம் ஆசாத் கோச்சிங் சென்டரின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதையடுத்து தற்போது மாணவர்கள் வகுப்புகளில் கலந்து கொள்கிறார்கள்.

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times