அதிரை மெயின் ரோட்டில் இயங்கி வரக்கூடிய அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் மொத்தம் 112 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 99% (111/112) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 1% மாணவர்களின் +2 வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. விரைவில் அவர்களும் மறு தேர்வு எழுதி தங்களது கல்வியில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவர்கள் கவனத்திற்கு :-
தேர்வு முடிவில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், ஸ்கேன் செய்யப்பட்டுள்ள தங்கள் விடைத்ததாள் நகலை கேட்டுப்பெற்று, அதனை ஆய்வு செய்து கூடுதல் மதிப்பெண் பெற முடியும் என்று கருதினால், மறுகூட்டல்/ மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும், தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் வரும் ஜூன்/ஜுலை மாதத்தில் நடைபெறும் சிறப்புத் துணைத் தேர்வில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படும். ஒரு முழு கல்வியாண்டு வீணாகாமல், இதில் தேர்ச்சி பெற்று இந்த ஆண்டிலேலே உயர்கல்வியைத் தொடர முடியும்.
Great article! The depth of analysis is impressive. For those wanting more information, visit: LEARN MORE. Looking forward to the community’s thoughts!