தமிழகத்தில் ஷவ்வால் பிறை தென்படவில்லை! நாளை மறுநாள் நோன்பு பெருநாள் என அறிவிப்பு!

ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை இன்று தமிழகத்தில் தென்படவில்லை – சனிக்கிழமை (மார்ச் 21) ஈதுல் ஃபித்ர் நோன்பு பெருநாள் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி முஃப்தி உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி அறிவிப்பு.

தமிழ்நாடு அரசு தலைமை காஜி முஃப்தி உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி அவர்கள் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது. இன்று வியாழக்கிழமை (19/03/2026) மாலை ஷவ்வால் மாதத்திற்கான பிறை தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் தென்படவில்லை. எனவே, ரமலான் மாதம் 30 நாட்களாக பூர்த்தியடைகிறது. அல்ஹம்து லில்லாஹ்…

இன்ஷா அல்லாஹ் 21/03/2026 சனிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் ஈதுல் ஃபித்ர் (நோன்புப் பெருநாள்) கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

புனித ரமலான் மாதத்தில் நாம் மேற்கொண்ட நோன்புகளையும், நல் அமல்களையும் எல்லாம் வல்ல இறைவன் அங்கீகரிப்பானாக. இந்த இனிய நாளில் நம்மிடையே ஈகையும் சகோதரத்துவமும் தழைக்கட்டும். ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்து மகிழ்வுடன் இப்பெருநாளை கொண்டாடுவோம்

Prayer Times

Advertisement

error: Content is protected !!