மஜ்லிஸ் தர்பியத்தில் ஹுஃப்பாள் (ஹாஃபிள்கள் பரிபாலன சபை) மற்றும் கலீஃபா உமர் (ரலி) பள்ளி இணைந்து நடத்தும் அதிரையர்களுக்கான அல்-குர்ஆன் மனனப் போட்டியின் இறுதி போட்டி மற்றும் பரிசளிப்பு விழா இன்று 29/04/2023 மாலை அஸர் தொழுகைக்கு பிறகு நமதூரில் அமைந்துள்ள கலீஃபா உமர் (ரலி) பள்ளியில் நடைபெற இருக்கிறது.
இருபது வயதுக்கு கீழுள்ள நமதூரை சார்ந்த முழுநேர மத்ரஸாவில் ஓதும் மாணவர்களுக்கும், பள்ளி/ கல்லூரியில் படித்துக் கொண்டு பகுதி நேர ஹிஃப்ளில் ஓதும் மாணவர்களுக்கும் தனித் தனியாக இந்த குர்ஆன் மனன போட்டி நடைபெற இருக்கிறது. இதன் முதல் சுற்று கடந்த 27-04-2023 அன்று ஷாதுலிய்யா புதுப்பள்ளியில் நடைபெற்றது. அதில் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டானர். அதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்களுக்கான இறுதி சுற்று மற்றும் பரிசளிப்பு விழாவும் நடைபெற இருக்கிறது.
மேலும் இந்த போட்டியானது 3 பிரிவில் நடைபெற இருக்கிறது, 15 ஜுஸ்உ வரை முடித்தவர்கள் ஒரு பிரிவாகவும்ம், 25 ஜுஸ்உ வரை முடித்தவர்கள் இன்னொரு பிரிவாகவும்ம், முழு குர்ஆனையும் மனனம் செய்தவர்கள் மற்றொரு பிரிவாகவும்ம் நடைபெற இருக்கிறது.
பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மஜ்லிஸ் தர்பியத்தில் ஹுஃப்பாள் ( ஹாஃபிள்கள் பரிபாலன சபை)
ஷாதுலிய்யா புதுப்பள்ளிவாசல்,
& கலீஃபா உமர் (ரலி) பள்ளி
அதிராம்பட்டினம்.
Loved the wit in this article! For more on this, click here: DISCOVER MORE. Keen to hear everyone’s views!
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.