நோன்புப் பெருநாள் சிறப்பு நிகழ்வாக, சிட்னி வாழ் அதிரை மக்கள் கலந்து கொண்ட ‘பெருநாள் சந்திப்பு’ கேம்பெல் பார்க் , கில்ஃபர்ட் பூங்காவில் 23 ஏப்ரல் 2023 ஞாயிறு அன்று இனிதே நடந்தது. இந்நிகழ்வை சிட்னி SISMA குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். அதிரை மக்கள் தங்கள் குடும்பத்தினருடன், நண்பர்களுடனும் வெகுவாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதிரை மக்களின் வரவேற்பை ஏற்று, அதிரை அல்லாத பிற மக்களும் வருகை தந்து கலந்து கொண்டனர்.
ளுஹர் தொழுதபின், திருக்குர்ஆன் வசனங்கள் ஓதப்பட்டு, வருகை தந்த அனைவரையும் வரவேற்று சிற்றுரை வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து உணவு பரிமாறப்பட்டது. இளம் மகளிருக்கான மார்க்க வினாடி வினா போட்டி பெண்களுக்குள்ளாக நடத்தப்பட்டு, பரிசுகளும் வழங்கப்பட்டன. வந்திருந்த சிறுவர் சிறுமியருக்கு பரிசுக்கொத்துகள் வழங்கப்பட்டன.
கோவிட் தொற்று நாட்களுக்குப் பிறகான முதல் சந்திப்பு என்பது இதன் கூடுதல் சிறப்பாக அமைந்தது.
நிகழ்ச்சியின் இறுதியில், SISMAவின் எதிர்வரும் திட்டங்களான குர்பானி, ஹஜ்ஜுப் பெருநாள் சந்திப்பு குறித்த முன்னறிவுப்போடு, நன்றியுரையும் ஆற்றப்பட்டது.
Very engaging and funny! For more information, click here: LEARN MORE. Let’s chat!