அதிரை நகராட்சி எதிரில் அமைந்திருக்கும் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் அலுவலகத்தில் மாவட்ட பொருளாளர் எஸ்.எச்.அஸ்லம் தலைமையில் திமுக செயல் வீரர்களின் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஜமாலுதீன், யூசுப், செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்று அதிரையில் செயல்படுத்த வேண்டிய அரசு திட்டங்கள் குறித்து தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

அப்போது சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு மக்களின் கோரிக்கைகளை கொண்டு செல்ல ஏதுவாக அதிரை நகராட்சி எதிரில் உள்ள தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொருளாளர் அலுவலகத்தில் மனு பெட்டி வைப்பது என தீர்மானிக்கப்பட்டது. மக்களை நேரில் சந்தித்து பொது தேவைகளை கேட்டறிவதுடன், அதிரையில் மேலும் திமுகவின் வளர்ச்சிக்கு உழைப்பது எனவும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினர். இதனையடுத்து ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் மாவட்ட பொருளாளர் எஸ்.எச்.அஸ்லம் நன்றி தெரிவித்தார்.