அதிரையில் நடைபெற்ற தஞ்சை தெற்கு மாவட்ட கழக பொருளாளர் அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்க வருகை தந்த மாவட்ட கழக செயலாளரும் பட்டுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கா.அண்ணாதுரைக்கு அதிரை அனைத்து ஜமாத், பஞ்சாயத்து நிர்வாகிகள், பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பொருளாளர் அலுவலகத்தை திறந்து வைத்து கழகத்தின் கருப்பு சிகப்பு இருவண்ண கொடியை ஏற்றிவைத்து கா.அண்ணாதுரை சிறப்பித்தார். அப்போது பேசிய அவர், அதிரை மக்களுக்கு எஸ்.எச்.அஸ்லம் செய்யும் சேவைகளுக்கு தாம் என்றென்றும் உடனிருப்பதாக கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் வர்த்தகர் அணி மாநில துணை தலைவரும் தலைமை கழக செயற்குழு உறுப்பினருமான பழஞ்சூர் செல்வம், மாவட்ட கழக நிர்வாகிகள், நகர, ஒன்றிய செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.