அதிரை காதிர் முகைதீன் கல்லுரியில் படித்து வருபவர் சபியுதீன்(21) த/பெ ஆப்பிள் இப்ராஹிம் இவர் அதிரை சிட்னி ஃப்ரெண்ட்ஸ் கிரிக்கெட் கிளப்(SFCC) அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் இடது கை மட்டையாளர் ஆவர்.
கடந்த வாரம் அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் நடைபெற்ற பாரதிதாசன் பல்கலைக்கழக கிரிக்கெட் அணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற சபியுதீன் தற்போது பாரதிதாசன் பல்கலைக்கழக அணிக்காக பெங்களூரில் நடைபெறுகின்ற தென் மண்டல அணைத்து இந்திய பல்கலைக்கழகம் நடத்தும் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் பாரதிதாசன் பல்கலைக்களத்திற்காக விளையாடி வருகிறார்.
இதுவரை
23/02/2023 அன்று நடைபெற்ற முதல் போட்டியில் Baradhidasan University vs Presidancy University (Bangalore) இடையிலான போட்டியில் Baradhidasan University அணி வெற்றி பெற்றது
24/02/2023 அன்று இரண்டாவது போட்டியாக Baradhidasan University vs Dr.MGR University இடையிலான நடைபெற்ற போட்டியில் Baradhidasan University அணி வெற்றி பெற்றது
இன்று 25/02/2023 மூன்றாவது போட்டியாக Baradhidasan University vs Banglore City University இடையிலான போட்டி தற்பொழுது நடைபெற்று வருகிறது என்பதனை தெரிவித்து கொள்கிறோம்.
மேலும் நடைபெற கூடிய அணைத்து இந்திய பல்கலைக்கழக கிரிக்கெட் போட்டியில் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து மொத்தம் 120 பல்கலைக்கழக கிரிக்கெட் அணி கலந்து கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அடுத்தடுத்த போட்டியின் முடிவுகள் குறித்து டைம்ஸ் ஆஃப் அதிரை ஊடகத்தில் அறியத்தருகின்றோம் என்பதை நேயர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
Great mix of humor and insight! For additional info, click here: READ MORE. Any thoughts?