மெர்லின் பேனாவின் சகாப்தம்!

மெர்லின் இது ஒரு பரவையின் பெயர் merline pen 1960-70 களில் பிறந்தவர்களில் அத்தனை மாணவர்களின் விரல்களிலும் தழுவப்பட்ட பேனாவாக இந்த மெர்லின் பேனா இருந்தே ஆகும் என்பதில் இன்றைய பெரியோர்களில் யாருக்கும் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது.

இன்று இறைவனின்(அல்லாஹ்)அழைப்பை ஏற்றுக்கொண்ட அப்துல் கரீம் அவர்களின் துணை பெயர்தான் மெர்லின் கரீம் ஆகும் அன்றைய காலத்தில் சென்னை நெ90 தம்புச்செட்டி தெருவில் மெர்லின் பேனா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார்கள் சென்னை பாண்டிச்சேரி முழுவதும் ஏஜண்டுகள் அமைத்து திறம்பட தொழில் செய்து வந்தார்கள்

அதிரையை பொருத்தவரை வெளிநாட்டு சபுராலிகளின் பிள்ளைகள் hero பேனாவும் மற்ற அத்தனை நபர்களும் மெர்லின் பேனாவைத்தான் உபயோகித்து வந்தார்கள் என்றால் மிகையான வார்த்தையல்ல.

இன்று நம்மை விட்டு அவர்கள் பிரிந்தாலும் அவர்களின் சுவடுகள் நம் ஊரில் உள்ள அத்தனை வீடுகளிலும் பத்திரமாய் பத்தரமாய் அவர்கள் தாயாரிபில் உருவான பேனாவின் எச்சங்கள் பதிந்த சொத்துப்பத்திரமாக பாதுகாக்கப்பட்டு கொண்டு இருந்துகிறது.

அதுபோல் அவர்களுக்கு அளிக்கப்பட அமல் நாமால் எனும் பட்டோலை வலது கையில் பெற்றவர்களாக அவர்களின் மறுமை வாழ்வு அமைய நாமெல்லாம் துஆ செய்வோமாக

நினைவுகளில் – மு.செ.மு.சபீர் அகமது

2 Comments
  • Sabira Arabu
    Sabira Arabu
    February 18, 2023 at 12:15 pm

    Assalaamu alaikum
    Jazak Allahu khairun to document my father’s life short and strong.

    Reply
  • Lilliant
    Lilliant
    June 28, 2024 at 2:18 pm

    This was both informative and hilarious! For further reading, check out: LEARN MORE. What do others think?

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders