அல் மத்ரஸதுர் ரஹ்மானிய்யா அரபிக் கல்லூரி மௌலவி, ஆலிம் பட்டமளிப்பு விழா!

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் உள்ள அல் மத்ரஸதுர் ரஹ்மானிய்யா அரபிக் கல்லூரியின் மௌலவி, ஆலிம் களுக்கான பட்டமளிப்பு விழா இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஹிஜ்ரி 1444 – ரஜப் மாதம் 27, 19.02.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09 – மணி முதல் 11.30 வர. அல் மத்ரஸதுர் ரஹ்மானிய்யா அரபிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற இருக்கிறது.

மௌலானா மௌலவி அல்ஹாஜ் ஷைஹூல் ஜாமிஆ அல்லாமா K.T. முஹம்மது குட்டி பாகவி ஹழ்ரத் கிப்லா அவர்கள் (முதல்வர், அல்மத்ரஸத்துர் ரஹ்மானிய்யா அரபிக்கல்லூரி,அதிராம்பட்டினம்.) நிகழ்ச்சியின் தலைமை தாங்கி ஸனது வழங்கி பேருரை நிகழ்த்துவார்

முன்னிலை கண்ணியமிகு அல் மத்ரஸதுர் ரஹ்மானிய்யா அரபிக் கல்லூரி நிர்வாகிகள்.

கிராஅத் மௌலானா மௌலவி அல்ஹாபிழ் P.அப்துல் காதிர் ஆலிம் காஷிஃபி ஹழ்ரத் அவர்கள். (இமாம், மரைக்காயர் பள்ளி,அதிராம்பட்டினம்)

வரவேற்புரை மௌலானா மௌலவி A.முஹம்மது நெய்னா ஆலிம் ரஹ்மானி அதிரமி அவர்கள். (பேராசிரியர், ரஹ்மானிய்யா அரபிக்கல்லூரி, அதிராம்பட்டினம்)

வாழ்த்துரை அல் மத்ரஸதுரீ ரஹ்மானிய்யா அரபிக் கல்லூரி பேராசிரியர்கள்.

சிறப்புரை மௌலானா மௌலவி அல்ஹாபிழ் டாக்டர் M.ஸதீதுத்தீன் ஆலிம் பாஜில் பாகவி MA.,PhD அவர்கள். (முதல்வர்,அல்ஹுதா அரபிக் கல்லூரி & தலைமை இமாம் குராஸானி பீர் பள்ளி,அடையார், சென்னை)

நன்றியுரை : ஸனது பெரும் மாணவர்கள். மஜ்லிஸின் இறுதியில் புனித மிகு திக்ரு மஜ்லிஸுடன் ஈருலக வெற்றிக்காக துஆ செய்யப்படும்.

குறிப்பு: உள்ளூர் வெளியூர் மாணவர்கள் எட்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரபிப்க் பாடத்துடன் மேல்வகுப்புப் பாடங்கள் படித்து பரீட்சை எழுதி வெற்றிபெற ஏற்பாடுகள் இந்த ஆண்டில் நடந்ததைப் போன்று இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times