நகராட்சியாக அறிவிக்கப்பட்ட அதிராம்பட்டினம் தாலுக்காவாவும் மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஊர் மக்களிடம் இருந்து வருகிறது அதிராம்பட்டினம் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசின் கவனத்திற்கு சென்றிருக்கிறது இந்த கோரிக்கையை வலுப்பெறச் செய்யவும் வலியுறுத்தவும் பிப்ரவரி 10 அன்று சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ஒன்று கூடி ஆலோசித்து அதிராம்பட்டினம் நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவரை நேரில் சந்தித்து வலியுறுத்தி கலந்துரையாடினர்
கலந்துரையாடலின் பொழுது பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டு அதன் அடிப்படையில் நேற்று (11/02/2023) அன்று பட்டுக்கோட்டை சட்டமன்ற அலுவலகத்திற்கு அதிரை நகராட்சி தலைவர் M.M.S தாஹிரா அம்மாள் அப்துல் கரீம் துணைத் தலைவர் இராம.குணசேகரன் தலைமையில் அனைத்து முகல்லா கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் அதிரை நகராட்சி திமுக கழக கவுன்சிலர்கள் திமுக கழக வார்டு செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து சென்று பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை MLA அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தினர்
கோரிக்கையை செவிமடுத்த சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் சில ஆலோசனைகள் வழங்கி தானும் துறை அமைச்சரிடம் சந்தித்து வலியுறுத்தி செய்து தருவதாக சொல்லி இருக்கிறார்கள்
உங்கள் அனைவருடைய முயற்சி வெற்றி பெறவும் விரைவில் அதிரையில் தாலுக்கா அலுவலகம் அமையவும் வாழ்த்தினார்.
Excellent content! The way you explained the topic is impressive. For further details, I recommend this link: EXPLORE FURTHER. What do you all think?