03/02/2023 நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட மக்களுடன் மஜக ஆலோசனை கூட்டம் அதிராம்பட்டினதில் மாவட்ட செயலாளர் அதிரை.ஷேக் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளரும், துணை பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மாநில செயலாளருமான நாச்சிகுளம். தாஜூதீன் முன்னிலை வகித்து, நிர்வாக பணிகள் குறித்து விவாதித்தார்.
இதில் பங்கேற்ற பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் புதிய கிளைகளை கட்டமைப்பது குறித்தும், வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார்.
பகுதிவாரியாக மக்கள் பிரச்சனைகளை கண்டறிந்து அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண வேண்டும் என்றும், சமூக நல்லிணக்கத்தை வலிமை படுத்தும் பன்முக அரசியலை வளர்த்தெடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
பிறகு நிரப்பப்படாத பொறுப்புகளை பூர்த்தி செய்வது குறித்தும், செயல்படும் புதியவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது பிறகு நகர துணை செயலாளர் பாசித் தந்தை மறைவிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் பைசல், IT WING மாவட்ட செயலாளர் JS.சாகுல் ஹமீது நகர செயலாளர் அதிரை மர்ஜிக் ,B.Com
நகர துணை செயலாளர் பாசித், பஷீர் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
I thoroughly enjoyed this piece. It was both informative and engaging, providing a lot of valuable information. Let’s discuss further. Check out my profile for more interesting content.