அதிரை ரிச்வே கார்டனில் நடைபெற இருக்கும் இறால் வளர்ப்போருக்கான கலந்துரையாடல் கூட்டம்…

இன்று 31.01.2023 காலை 10 மணி அளவில் இறால் வளர்ப்போருக்கான கலந்துரையாடல் கூட்டம் ( Farmers meet) MPEDA மற்றும் மீன்வளத்துறை இணைந்து நடத்துகின்றது. இக்கூட்டமானது அதிராம்பட்டினம் ரிச் வே கார்டனில் நடைபெற உள்ளது. எனவே இக்கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட இறால் வளர்ப்போர் அனைவரும் தவறாது கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

தமிழ்நாடு மீன் வளர்ப்போர் நல சங்கத்தின் வாயிலாக உள்நாட்டு மீன் வளர்ப்பு விவசாயிகள் அனைவரையும் அதிராம்பட்டினதில் நடைபெற உள்ள மாவட்ட அளவிலான இறால் வளர்ப்போர் கலந்துரையாடல் கூட்டத்திற்கு கலந்துகொண்டு உள்நாட்டு இறால் வளர்ப்போர் இன்றைய தேவையான லைசன்ஸ் அதாவது உரிமம் பெறுவதற்கான சட்டத்தை ஏற்றுமாறு வருகின்ற அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறும் வகையில் அனைத்து இறால் வளர்ப்பவரும் இந்த கூட்டத்தில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் தஞ்சை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்றைய நிலையில் நல்ல தண்ணீரில் இறால் வளர்த்து வருகிறோம். குறிப்பாக வனாமி இறால் வளர்த்து வருகிறோம்.

இந்த நிலையில் அரசுக்கு சரியான வழியில் நம் பிரச்சனைகளை கூறுவதற்கு நல்ல ஏற்பாடாக நமது கடல் பொருள் ஏற்றுமதி வாணிப கழகம் ஏற்பாடு செய்த இந்த கூட்டத்திற்கு அனைவரும் வரவேண்டும். அதில் மாவட்ட அளவில் இருக்கிற உயர் அதிகாரிகளும் ,நமது துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள இருப்பதால் அன்பான விவசாயிகளே கட்டாயம் கலந்து கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது

மாநல் பரமசிவம் மாநில துணைத்தலைவர் தமிழ்நாடு மீன் வளர்ப்போர் விவசாயிகள் நல சங்கம்.

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times