அதிரை மகாதிப் தீனியாத் மக்தப் வழிகாட்டி நடத்திய உருவாகுவோம் உருவாக்குவோம் இஸ்லாமிய திறனாய்வு போட்டி நேற்று செக்கடி பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ் அதிரையில் உள்ள 20 ஆண்கள் மக்தபிலிருந்து கட்டுரை வினா விடை பேச்சு மற்றும் பாங்கு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றனர்.
மக்ரிப் தொழுகைக்கு பிறகு சென்னை வடபழனி ஹக்கானியா ஜாமியா பள்ளியின் தலைமை இமாம் மௌலவி தர்வேஷ் ரஷாதி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள் மேலும் தீனியாத் தஞ்சை கிழக்கு மண்டலம் தலைமை தீனியாத் ஒருங்கிணைப்பாளர் மௌலவி சல்மான் யூசுஃபி ஹஜ்ரத் அவர்களும், அய்யம்பேட்டை தீனியாத் துணை ஒருங்கிணைப்பாளர் மௌலவி உமர் ஃபாரூக் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்களும், கும்பகோணம் தீனியாத் துணை ஒருங்கிணைப்பாளர் மௌலவி சிராஜுத்தீன் முனீரி ஹஜ்ரத் அவர்களும், திருவாரூர் மாவட்ட தீனியாத் துணை ஒருங்கிணைப்பாளர் மௌலவி ரியாஸ் ஃபைஜி ஹஜ்ரத் அவர்களும் கலந்து கொண்டனர்.
இதற்காக இரவு பகலாக அயராது பாடுபட்ட மக்தப் ஆசிரியர்கள் நிருவாகிகள், இதற்காக உடலாலும் பொருளாலும் உதவி செய்த அணைத்து நல் உள்ளங்களுக்கும் அதிரை மகாதிப் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறது
அதிரை மகாதிபின் நோக்கம்!
1) ஒவ்வொருவரும் அல்லாஹ்வுடன் இணைவது மற்றும் இணைப்பது.
2) நமது ஊர் மற்றும் நம்மை சுற்றியுள்ள கிராமங்களில் 100 சதவீதம் சுன்னதை பின்பற்றும் ஒழுக்கமுள்ள தலைமுறையை உருவாக்க முயற்சிப்பது.
3) இறை அச்சமுடையவர்களாகவும் சமூக சேவை செய்யக்கூடியவர்களாகவும் உருவாக்குவது.
4) எல்லா துறைகளிலும் சமூக முன்னேற்றத்திற்கு இணைப்பு பாலமாக செயல்படுவது.
5) கருத்து வேறுபாடுகளை கலைந்து அனைவரையும் அரவணைத்து ஒன்றாக செயல்படுவது.
6) life navigation centre அமைத்து உளவியல் , கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவ உதவி, தொழில் முனைவோருக்கான வழிகாட்டல் ஆகியவை வழங்குவது.
7) வட்டி எனும் கொடுமையிலிருந்து மக்களை விடுவிப்பது.
8) அனைத்தையும் இஹ்லாசுடன்/மன தூய்மையோடு செய்வதற்கு அல்லாஹ் உதவி செய்வானாக.
9) நாட்டு பற்றுள்ளவர்களாக உருவாக்குவது
அதிரை மகாதிப் தீனியாத் துணை ஒருங்கிணைப்பாளர் மௌலவி முஹம்மது இபுராஹிம் காஷிஃபி – +91 9791358366




Thanks!
Great read! The depth and clarity of your analysis are impressive. If anyone is interested in diving deeper into this subject, check out this link: DISCOVER MORE. Looking forward to everyone’s thoughts!