தஞ்சாவூர் மாவட்டம் கீழ்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் முரு கேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது நீர்வளத்துறையின் பராமரிப்பில் உள்ள கல்லணைக்கால் வாயில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவி யுடன் நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனபடுத்துதல் திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் தொடர்ச்சியாக பட்டுக்கோட்டை அருகே உள்ள ராஜாமடம் கிளைக் கால்வாய் அதன் கிளைவாய்க்கால்கள் மற்றும் ஏரிகள் புனர மைக்கப்படுகிறது.
இது குறித்து தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா அதிராம்பட்டினத்தில் உள்ள சம்சுல் இஸ்லாமிய சங்க அரங்கில் பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நாளை (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த கூட்டத்திற்கு கீழ்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் முருகேசன் மற்றும் பட்டுக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் நீர்வளத்துறை பொறியாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
எனவே பொதுமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Excellent article! I appreciate the thorough and thoughtful approach you took. For more details and related content, here’s a helpful link: LEARN MORE. Can’t wait to see the discussion unfold!