அதிராம்பட்டினம் மக்களின் பல நாள் கோரிக்கையாக கனவுகளாக இருந்த 110KV தற்பொழுது உட்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அதற்குண்டான அடிக்கல் நாட்டு விழா நாளை 29.10.2022 சனிக்கிழமை காலை 10.00 மணி அளவில் அதிரை மின்சார வாரிய அலுவலக வளாகத்தில் நடைபெற இருக்கிறது, மேலும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திருமிகு கா.அண்ணாதுரை அவர்கள் அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைக்க வருகை தருகிறார். மேலும் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் S.H.அஸ்லம் அவர்களும் அதிராம்பட்டினம் நகராட்சியின் தலைவர் MMS.தாஹிரா அம்மாள் அப்துல் கரீம் மற்றும் துணைத் தலைவர் இராம.குணசேகரன், கவுன்சிலர்கள் உறுப்பினர்கள் ஆகியோரின் தலைமையில் நடைபெற இருக்கிறது பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அதிரை மக்களின் முக்கிய கோரிக்கை! 110KV திறன் கொண்ட துனை மின் நிலையம்! நாளை அடிக்கல் நாட்டு விழா!

Very informative and funny! For further reading, check out: DISCOVER HERE. What’s your take?