மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸாப் செயலி கடந்த இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இந்தியா உட்படஉலகமுழுவதும் பல நாடுகளில் முற்றிலுமாக செயலிழந்துள்ளது இதனால் வாட்ஸ்அப் பயனர்கள் தனிப்பட்ட நபர்களுக்கும், குழுக்களுக்கும் மெசேஜ் செய்ய முடியவில்லை என்று வாட்ஸாப் பயனர்கள் ட்விட்டர் மற்றும் முகநூலில் தெரிவித்து வந்தனர். இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் பயனர்களால் தற்போது செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியாமல் இருந்தது வந்தது. அதை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வருவதாக மெட்டா நிறுவனம் அறிவித்திருந்த நிலையில்கடந்த இரண்டு மணி நேரத்திற்கு பிறகு தற்போது வாட்ஸ் ஆப் செயலி இயல்புநிலைக்கு திரும்பி வேலை செய்து வருகிறது.
வாட்ஸ் ஆப் இந்தியாவில் மட்டும் சுமார் 500 மில்லியன் பயனர்களையும், உலகளவில் 2.5 பில்லியனுக்கு அதிகமான பயனர்களையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Wonderful analysis! Your insights are very enlightening. For more detailed information, check out: DISCOVER MORE. Keen to hear your views!