தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இயங்கி வரும் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று (19.10.2022) திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அப்துல் அஜீஸ், எரிபொருள் மற்றும் சுற்றுச்சுழல் விஞ்ஞானி அவர்கள் இமாம் ஷாஃபி பள்ளிக்கு வருகை புரிந்து , 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி விழிப்புணர்வை ஊட்டினார்.
கார்பன்-டை-ஆக்ஸைடு மறுசுழற்சி ஆராய்ச்சி, செலவில்லாத மின்சாரம் போன்ற ஆராய்ச்சிகளை கண்டுபிடித்துள்ளார். பள்ளிப் பாட புத்தங்களோடு மற்ற அறிவியல் சார்ந்த புத்தங்களை மாணவர்கள் படிக்க வேண்டும். தவறுகளிலிருந்தும் பாடம் கற்றுக் கொள்ளலாம். ஆசிரியர்கள் மாணவர்களை சிந்திக்க வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சிந்தித்தல் கனவாக மாறி பின்பு செயலாக மாறும் என்று அவர் கூறினார். அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளில் மாணவர்கள் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினார்
அவருடைய சிறப்பு உரையாடல் மாணவர்களிடையே புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.


