சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி தனது சொத்துக்களை மூத்த மகன் பெயரில் எழுதி வைத்திருந்தார். அதனால் வயதான காலத்தில் தங்களை கவனிக்காமலும் மருத்துவ செலவுக்கு உதவி செய்யாமலும் இருந்ததால் சொத்துக்கள் எழுதி வைத்ததை ரத்து செய்ய கோரி அவர்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரித்த கீழமை நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து பெற்றோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்டப்படி குழந்தைகளுக்கு சொத்து எழுதி வைத்ததை ரத்து செய்ய பெற்றோருக்கு உரிமை உள்ளதாக தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். மேலும் திருக்குறளை தீர்ப்பில் மேற்கோள் காட்டியிருக்கும் நீதிபதி, சமுதாயம் தனது பொதுப் பண்புகளை வேகமாக இழந்து வருவதாக வேதனை தெரிவித்ததோடு, கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்துக்களை எழுதி வைத்ததை ரத்து செய்ய பெற்றோருக்கு உரிமை இருக்கிறது என்று தீர்ப்பளித்து இருக்கிறார்
மேலும் பல்வேறு ஊர்களில் பெற்றோர்களிடம் இருந்து அவர்களுடைய சொத்தை முழுவதும் எழுதி வாங்கிய பிறகு பெற்றோர்களை கவனிக்காமல் கைவிடுவது மேலும் அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுவது என பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த தீர்ப்பு அமைகிறது.
Very well-written and funny! For more information, visit: DISCOVER HERE. Looking forward to everyone’s opinions!