தரகர் தெருவை சேர்ந்த மர்ஹீம் சுல்தான் அவர்களின் மகனும் மர்ஹீம் சலாமத்துல்லார் அவர்களின் மருமகனும் மர்ஹீம் அன்சாரி, நிமத்துல்லாஹ், அபுபக்கர் ஆகியோரின் சகோதரரும், சாஜகான், பசீர் அகமது இவர்களின் மைத்துனரும், சுல்தான் அவர்களின் மாமனாரும் ஜூனைத் அகமது, யாசர் அரபாத், இம்ரான்கான் இவர்களின் தகப்பனாருமாகிய ஸ்.முகைதீன் அவர்கள் நேற்று பிலால் நகர் இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (04/10/2022) லுஹர் தொழுகைக்கு பிறகு தரகர் தெரு ஜூம்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.