தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் AFWA (adirai Friends welfare alliance) தலைமையில் கடந்த (24/09/2022) முதல் கிரிக்கெட் தொடர் போட்டி கிராணி மைதானத்தில் நடைபெற்றது.
இந்த தொடரில் அதிரையை சார்ந்த (AFCC, SYDNEY, PCC, WCC, ASC, RCCC) ஆகிய ஆறு அணிகள் பங்கேற்றனர்.
இந்த தொடர் குரூப் A & குரூப் B முறையில் பிரிக்கப்பட்டு குரூப் A வில் AFCC, ASC, PCC அணிகளும். குரூப் B இல் WCC, RCCC, SYDNEY அணிகளும் பிரிக்கப்பட்டு விளையாடினார்கள்.
ஒவ்வரு குரூப்களிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் அரை இறுதி ஆட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
அரை இறுதி ஆட்டத்திற்கு (PCC, AFCC, RCCC, WCC) ஆகிய நான்கு அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்
அதன் பின்னர் அரை இறுதி ஆட்டத்தில் RCCC அணியினரும் WCC அணியினரும் வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்கள்.
அதனை தொடர்ந்து, இன்று (01/10/2022) இறுதி போட்டி WCC VS RCCC இடையே நடைபெற்றது, இதில் முதலாவதாக பேட்டிங் செய்த WCC அணியினர் 16.1 ஓவர்களில் 71 ரன்கள் அடித்து 10 விக்கெட்களை இழந்தனர், அதன் பின்னர் 72 ரன்களை வெற்றியிலக்காக கொண்ட RCCC அணியினர் 13 ஓவர்களில் 75 ரன்கள் அடித்து 2 விக்கெட்களை மட்டுமே இழந்து இந்த தொடரை UNBEATEN முறையில் வெற்றிபெற்றனர்.
இத்தொடரில் முதல் இடம் பெற்ற RCCC அணியினருக்கு 6000₹ மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது.
இரண்டாம் இடம் பெற்ற WCC அணியினருக்கு 4000₹ மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது.
சிறந்த மடையாளர் பரிசு PCC அணியின் ஜபேஸ்டின் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த பந்துவீச்சாளர் பரிசு RCCC அணியின் மணி அவர்களுக்கு வழங்கப்பட்டது.
வளர்ந்து வரும் இளம் வீரருக்கான பரிசு ASC அணியின் சுஹைல் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
Your humor made this topic so engaging! For further reading, click here: DISCOVER MORE. Looking forward to the discussion!