தொடரும் விஷப்பாம்புகளின் தொல்லை! காடுகளாக மாறும் வீட்டு மனைகள்! மக்களே கவனம் தேவை!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் சித்திக் பள்ளி சாலையில் கடந்த சில நாட்களாக விஷப்பாம்புகளின் தொல்லைகள் அதிகரித்து வருகிறது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சாலையில் இருந்த இரு சக்கர வாகனத்தில் பாம்பு ஒன்று தஞ்சமடைந்து இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன் பின்னர் அந்த பகுதியில் இருந்த ஒரு வீட்டிற்குள் நுழைந்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு பாம்பு பிடிப்பவர்களை அழைத்து முறையாக பிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.

அதனை தொடர்ந்து நேற்று (21/09/2022) இரவு சித்திக் பள்ளி எதிர்புறம் செல்லும் சாலை அருகில் ஒரு வீட்டிற்கு பக்கத்தில் காடுகளாக மாறி இருக்கும் வீட்டு மனையில் இருந்து விஷப்பாம்பு ஒன்று அருகில் இருக்கும் வீட்டிற்குள் வந்துள்ளது நொடிப்பொழுதில் கண்டு அப்புறப்படுத்தப்பட்டது, இதனால் அந்த காடுகளாக இருக்கும் மனை அருகில் வசிக்கும் பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

வீடுகளுக்கு அருகில் மனைகள் வைத்திருக்கும் உரிமையாளர்களே தங்கள் மனைகளை காடுகளாக இருக்க விடாமல் அக்கம் பக்கத்தினருக்கு தீங்கு விளைவிக்காமல் சுத்தம் படுத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, இவ்வாறு காடுகளாக இருக்கும் இடத்தில பூச்சிகளும், பாம்புகளும், விஷஜந்துகளும் தங்கும் இடமாக மாறுகிறது…

மனை உரிமையாளர் இதில் அலட்சியம் செய்யாமல் சற்று கவனம் செலுத்தி உடனடியாக இதனை சுத்தம் செய்யும் மாறு அப்பகுதி மக்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் பொதுமக்கள் கவனத்திற்கு சாலையில் செல்லும்போது கவனமாக வெளிச்சம் உள்ள பாதையில் செல்லுங்கள். வெளிச்சம் இல்லாத இடத்திற்கு டார்ச் லைட் வைத்து கொண்டு செல்லுங்கள். இதுபோன்ற விஷஜந்துகளை விட்டு அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!

இதுபோன்ற விஷஜந்துகளை விட்டு பாதுகாத்திட கீழ் காணும் துஆ வை காலையிலும் மாலையிலும் ஓதி வாருங்கள்!

அஊது பிகலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மாகலக். பிஸ்மில்லாஹில்லதீ லாயளுர்ரு மஅஸ்மிஹீ ஷைஉன் பில் அர்ளி வலா பிஸ்ஸமாஇ வஹுவஸ்ஸமீஉல் அளீம்.

பொருள்: எல்லா விதமான படைப்புகளின் தீங்கை விட்டும் அல்லாஹ்வின் திருவாக்கியங்களின் சக்தியைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன்.

2 Comments
  • Mariat
    Mariat
    June 29, 2024 at 2:29 am

    What a great read! The humor was a nice touch. For further details, click here: READ MORE. Let’s chat about it!

    Reply
  • Monroe_B
    July 13, 2024 at 8:26 am

    Very interesting information!Perfect just what
    I was looking for!Raise blog range

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders