அதிரை சித்திக் பள்ளி அருகில் இன்று (10/09/2022) பகல் 1:30 மணி அளவில் சாலையோரம் பாம்பு ஒன்று ஓடியுள்ளது, அதனை கண்ட பெண்மணி உடனே தன் பிள்ளையிடம் தெரிவித்த பிறகு இடத்திற்கு வந்து பார்த்த பொது அங்கு இருந்த பாம்பு அருகில் இருந்த ஒரு இருசக்கர வாகனத்திற்குள் நுழைந்துள்ளது, அதனை கண்ட இளைஞன் பல்வேறு முறையில் அந்த பாம்பினை 2 மணி நேரத்திற்கும் மேல் வெளியேற்ற முயன்றும் வெளியேற்ற முடியவில்லை. அதன் பிறகு பாம்பு தானாகவே வாகனத்தில் இருந்து வெளியேறி, எதிர்புறம் உள்ள ஒரு வீட்டு கார் நிறுத்தும் இடத்தில நுழைந்துள்ளது, இதனை அறிந்த வீட்டினர் அச்சத்தில் ஆழ்த்தப்பட்டனர், அதன் பிறகு உடனடியாக பாம்பு பிடிப்பவர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வரவழைத்து பாம்பினை முறைப்படி பிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.
பொதுமக்கள் தங்கள் வாகனத்தை பயன்படுத்தும் முன் வாகனத்தை நன்கு பார்வையிட்டு அதன் பிறகு பயன் படுத்துங்கள். பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக இந்த செய்தியை வெளியிடுகிறோம்.
This piece provided a lot of valuable information and was very well-written. Let’s chat more about it. Feel free to visit my profile for more related content.