வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கு இருக்கும் வங்கியின் ATM மூலம் மாதத்துக்கு 5 முறையும், பிற வங்கி ATM கள் மூலம் 3 முறையும் இலவசமாக பணம் எடுத்தல் உள்ளிட்ட பரிமாற்றங்களை செய்ய முடியும்.
அதற்கு மேல் நடைபெறும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்தவகையில் அனுமதிக்கப்பட்ட இலவச பரிமாற்றத்துக்கு அப்பால் நடைபெறும் பரிமாற்றங்களுக்கு ரூ.20 கட்டணமாக பிடிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மாதத்துக்கு 5 முறைக்கு மேல் ATM மையங்களில் எடுக்கும் ஓவ்வொரு பணம் பரிவர்த்தனைக்கும் தற்போது வசூலிக்கப்பட்டு வந்த ரூ.20 கட்டணத்துடன் கூடுதலாக ஒரு ரூபாய் அதிகரித்து ரூ.21 ரூபாய் வசூலிக்கும் புதிய கட்டண நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
Your humor made this topic so engaging! For further reading, click here: DISCOVER MORE. Looking forward to the discussion!