கடந்த மாதம் AFFA நடத்திய மின்னொளி கால்பந்து தொடர் போட்டியை அடுத்து FRIENDS FOREVER நடத்தும் மாநில அளவிலான ஐவர் மின்னொளி கால்பந்து தொடர் 03.08.2022 புதன்கிழமை இன்று மாலை 4:30 மணிக்கு கிராணி மைதானத்தில் துவங்குகிறது.

இத்தொடரில் முதல் பரிசு ₹50,022 இரண்டாம் பரிசு ₹30,022, மூன்றாம் பரிசு ₹20,022, நான்காம் பரிசு ₹10,022 என ஒருலட்சத்துக்கும் மேல் செலவில் இத்தொடர் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரையில் அடுத்தடுத்து கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருவதால் உள்ளூர் கால்பந்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.